02.08.24

இன்றைய சிந்தனைக்கு

சந்தோஷம்

புரிந்துணர்வு சந்தோஷத்தை கொண்டுவருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும், எதிர்மறையானவற்றிற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வதை நாம் காண்கின்றோம். நம்முடைய  எதிர்மறையான உணர்வுகளை நாம் அறிந்து கொள்ளும்போது, நம்மால் அறிவுபூர்வமாக விஷயங்களை பார்க்க முடியவில்லை, இது மேலும் எதிர்மறையானவற்றிற்கு மட்டுமே வழிவகுக்கும்.

செயல்முறை:

என்னுடைய வாழ்க்கையில் நேர்மறையானவற்றை கொண்டுவருவதற்கு, எதனால் சூழ்நிலை ஏற்பட்டது என புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியம். அதன்பின், என்னால் அனைத்து சூழ்நிலைகளிலும், சந்தோஷமாக இருக்க முடியும். மற்றவர்களுடைய எதிர்மறையான பாதிப்பிலிருந்து என்னால் விடுபட்டு இருக்க முடியும். அதற்கு மாறாக, என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு  நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக ஆகுவேன்.