02.10.24
இன்றைய சிந்தனைக்கு
சந்தோஷம்
உண்மையான சந்தோஷம் என்பது மற்றவர்களின் இதயத்தை தொடும் அனுபவம் ஆகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நேர்மறையான சூழ்நிலைகளிலும் கூட, சிலசமயங்களில் நாம், சந்தோஷமாக இல்லாதிருப்பதையும் அல்லது நம்மால் மற்றவர்களை சந்தோஷப்படுத்த முடியாதிருப்பதையும் நாம் காண்கின்றோம். ஆனால் ஏன் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
செயல்முறை:
நான் உண்மையாகவே சந்தோஷமாக இருக்கும்போது, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இயற்கையான ஆசை எனக்கு இருக்கிறது. பகிர்ந்து கொள்வதற்கான இந்த தூண்டுதல் என்னுடைய சந்தோஷத்தை பரப்புவதற்கு உதவுகின்றது. சந்தோஷமானது உண்மையின் அடிப்படையில் இருக்கும்போது எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைவரும் என்னுடைய மனநிலையிலிருந்து நன்மை பெறுகிறார்கள்.