03.01.25

இன்றைய சிந்தனைக்கு......

இதயபூர்வமான அன்போடு சேவை செய்வதென்பது வெற்றியை உறுதி செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய போது, சில நேரங்களில் கட்டாயத்தின்பேரில் அதை செய்கின்றோம். உண்மையில் நமக்கு அதை செய்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் சூழ்நிலைகள் அல்லது மனிதர்கள் நம்மை அதை செய்ய கட்டாயப்படுத்துவதாக இருக்கிறது. அதன்பிறகு, அந்த உதவியை நம்மால் சந்தோஷமாக செய்ய முடியவில்லை. அதில் நமக்குகோ அல்லது மற்றவர்களுக்கோ நன்மை இருப்பதாக தெரியவில்லை. 

தீர்வு: நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போதுஅவர்கள் நன்மையடைகிறார்களா என்பதை அறிந்துகொள்ள உணர்வுபூர்வமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வித முயற்சியால், நம்மால் மற்றவர்களுக்கு அன்புடன் பாரமில்லாமல் உதவி செய்ய முடிகின்றது. இவ்வாறுநம்முடைய செயல்கள் மேலும் சிறந்தமுறையில் பயனுள்ளதாகின்றது.