03.06.24

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

ஒருவருக்கு நம்பிக்கையூட்டுவது என்றால், அவர்களுடைய பலவீனங்களை அவர்கள் வெற்றிகொள்ள உதவுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: 

நாம், ஒருவர் செய்கின்ற தவறுகளை கவனிக்கும்போது, நாம் அத்தவறுகளை எதிர்த்து செயல்படுவதோடு, அதை, அவர்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம். அவருடைய தவற்றை அவர் உணறும் வரை, அப்பிரச்சனையை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றோம்.  ஆனால் இப்படிப்பட்ட அணுகுமுறையினால், அவர் அரிதாகவே நன்மையடைகின்றார். அவர்களுக்கு, தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ள தைரியம் குறைவாக இருக்கிறது அல்லது அவர்கள் மாற்றமடைய விரும்பவில்லை.

செயல்முறை: 

நான் ஒருவருடைய தவறை அறிந்துகொள்ளும்போது, நான் கையாளுகின்ற முறையானது, அவர்களுக்கு அதிக அளவில் நன்மை பயக்குவதை நான் உறுதி படுத்திகொள்ள வேண்டும். அவர்களுடைய நேர்மறையான குணங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் மனம் கலங்காது, ஊக்கத்தோடு தங்களுக்குள் மாற்றத்தை கொண்டு வருவதை நான் உறுதி செய்துகொள்ள வேண்டும்.