03.07.24

இன்றைய சிந்தனைக்கு

திடநம்பிக்கை

முகமலர்ச்சியுடன் இருப்பது அனைத்து பிரச்சனைகளையும் சுலபமாக்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, உள்ளார்ந்த சந்தோஷத்தை தக்கவைத்துக்கொள்வது சிரமமாக தென்படலாம்; மனமானது மேன்மேலும் எதிர்மறை எண்ணங்கள், பயம் அல்லது கவலையில் சிக்கி கொள்கின்றது. இதன் காரணமாக, பிரச்சனைகள் அதன் அளவை காட்டிலும் பெரிதாக தென்படுகிறது. மேலும், நாம் தீர்வு கண்டுபிடித்து ஆக்கபூர்வமாக பணியாற்றும் திறமையை இழக்கின்றோம்.

செயல்முறை:

பிரச்சனையை அறிந்துகொண்டவுடன், முதலாவதாக நான் செய்ய வேண்டிய காரியம் எனக்குள் சிரித்து கொள்வது ஆகும். நான் எனக்குள் சந்தோஷமாக இருப்பதை நான் உறுதி செய்தவுடன், ஒவ்வொரு சூழ்நிலையும் கடந்துவிடும் என்றும், சூழ்நிலை எனக்கு ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கின்றது என்பதையும் நான் அறிந்து கொள்கிறேன். அதன்பிறகு, நான் தீர்வுகளை மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் கண்டுபிடிகின்றேன்.