03.08.24

இன்றைய சிந்தனைக்கு

விவேகம்

விவேகத்துடன் இருப்பவரே கவனக்குறைவு அல்லது மற்றவர்களைப்பற்றி எதிர்மறையாக பேசுவதிலிருந்து விடுபட்டு இருப்பவர் ஆவார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மிடம் யாராவது மற்றவரைப்பற்றி எதையாவது எதிர்மறையாக சொல்லும்போது, நாம் அதை பெரும் ஆர்வத்தோடு கேட்கும் போக்கு நம்மிடம் உள்ளது. இது மற்றவரை தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கப்படுத்துகின்றது. ஆனால் இந்த மாதிரியான பேச்சு யாருக்கும் உண்மையாக பயனளிக்காது. மேலும் அது தற்போதைய பிரச்சனைக்கு தீர்வுகளையும் வழங்காது.

செயல்முறை:

யாராவது மற்றவரின் குறைகளை பற்றி பேசும்போது, நான் ஏன் அதை கேட்டுக்கொண்டிருக்கின்றேன் என்று எனக்குள் கேள்வி கேட்பது அவசியம். இந்த தகவலினால் எனக்கு எதாவது பயன் இருக்கிறதா, அல்லது சூழ்நிலையை என்னால் ஏதாவது செய்ய முடியுமா? அப்படி இல்லையென்றால், அந்த பேச்சை கேட்பதால் எனக்கு எந்த பயனும் இல்லை என எனக்குள் நினைவுபடுத்திகொள்வது அவசியம். அதற்கு மாறாக, நான் பேசுபவரின் நேர்மறையான தன்மைகளை பார்க்கும் முயற்சியை மேற்கொள்வதோடு, மேலும் எவ்வாறு அனைவருக்கும் இதில் கவனத்தை செலுத்துவதற்கு உதவி செய்வது என்பதை பற்றி சிந்திப்பதும் அவசியம்.