03.12.24
இன்றைய சிந்தனைக்கு......
வளைந்து கொடுக்கும்தன்மை:
வளைந்து கொடுக்கத் தெரிந்தவரே, பிழைக்கத் தெரிந்தவர்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பெரும்பாலும், நாம் ஒரு மனிதரிடமோ அல்லது சூழ்நிலையிலோ வளைந்து கொடுக்க நேரிடும் போது, நாம் அதிகமான எதிர்மறையான எண்ணங்களை அனுபவம் செய்கின்றோம். இது நமக்கு சிரமமாக இருக்கிறது. மேலும், இவ்வாறு நாம் வளைந்து கொடுப்பது மற்றவர்களின் நன்மைக்காக என்று நாம் உணரும் போக்கு நம்மிடம் உள்ளது.
செயல்முறை:
வளைந்து கொடுப்பது என்றால், அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு வேறு எதுவும் செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்வதாகும் – அதை ஏற்றுக்கொள்வது, விவேகமானதாகும். மற்றவர்கள் நன்மையடைவார்கள் என்பதால் நான் வளைந்து கொடுக்கவில்லை, ஆனால், எதிர்காலத்தில் நான் நன்மையடைவேன். ஸ்தூலமாக என்னால் ஒன்றைத் தாண்டி செல்ல முடியாமல் இருக்கும் போது, என்னால் அதை விலக்கமுடியாது, அதனால், நான் முன்னேற வேண்டுமானால், அதை கடந்து செல்லவதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும்.