04.01.25

இன்றைய சிந்தனைக்கு......

அனைத்தையும் சரியான முறையில் செய்யும்போது வெற்றி நிச்சயமாகின்றது.

கணிப்பு: சில நேரங்களில் நமக்கு வெற்றி கிடைக்காதபோதுகுறுக்கு வழியை தேர்ந்தெடுக்க ஆசைப்படுகிறோம்.  இது நமக்கு தற்காலிக வெற்றியை கூட தரலாம். ஆனால் தொலைநோக்கு பார்வையில் அதில் அந்த அளவிற்கு நன்மை இல்லை என்பதை நாம் காண்கிறோம்.

தீர்வு: நாம் எப்பொழுதெல்லாம் குறிப்பாக ஒரு கடினமான காரியத்தில் இடுப்படும்போதுநாம் சரியான முறையை பின்பற்றுகிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்த காரியமும் சரியான முறையில் செய்யபடும்போது, வெற்றி நிச்சயம்.