05.02.25
இன்றைய சிந்தனைக்கு
உற்சாகம்:
கவனக்குறைவிலிருந்து விடுபட்டு இருப்பது என்பது எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
மற்றவர்கள் அவர்களுடைய வேலையில் கவனக்குறைவாக இருப்பதை நாம் பார்க்கும்போது, நாமும் கவனக்குறைவாக ஆகும் போக்கு நம்மிடமிருக்கிறது. மற்றவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதை பார்க்கும்போது, நாமும் அவ்வாறு இருப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறோம். அவ்வாறான கவனக்குறைவு, நாம் உற்சாகமாக இருப்பதையும், மேற்கொண்டு முன்னேறுவதற்கு முயற்சி செய்வதையும் தடுக்கிறது.
செயல்முறை:
கவனக்குறைவு என்பது, ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவும் தன்மைள்ளது. யாராவது கவனக்குறைவாக வேலை செய்வதை நான் பார்க்கும்போது, எனக்குள் நான் திடமாக இருப்பதுடன், என்னுடைய வேலையில் தீவிர கவனத்தை செலுத்துவது அவசியம். இது என்னை உற்சாகத்துடன் முன்னோக்கி செல்ல உதவி செய்யும்.