05.07.24

இன்றைய சிந்தனைக்கு

பொறுப்பு:

எப்பொழுதும் பொறுப்போடு இருப்பது என்றால், தொடர்ந்து துல்லியமாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலான நேரங்களில், நாம், ஒரு விஷயம், தற்செயலாக நடந்துவிடும் என்றும், மற்றவர்கள் செய்துவிடுவார்கள் என்றும் விட்டுவிடுகின்றோம். பெரிய விஷயங்களை பற்றி நாம் அக்கறை கொள்கின்றோம், ஆனால் சிறு விஷயங்களில் கவனக்குறைவாக உள்ள மனபோக்கு நம்மிடம் உள்ளது. மற்றவர்கள் அதை கவனித்து கொள்வார்கள் என்று நாம் விட்டுவிடும்போது, அதாவது, அதிகார பூர்வமாக நாம் அந்த காரியத்தை அவர்களிடம் கொடுக்காதபோது, அவர்கள் அதை செய்யாமல் இருக்கலாம், அப்போது, நாம் ஏமாற்றமடைகின்றோம்.

செயல்முறை:

நான் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்திற்கும், நான் தான் முழு பொறுப்பு என்பதை நான் உணரும்போது, பெரிய மற்றும் சிறு காரியங்கள் அனைத்தையும், நான் மேற்பார்வை இடுவது அவசியம். இதன்மூலம் நான் கவனக்குறைவாக இருப்பதை நிறுத்திவிடுவேன். இது நான் செய்யும் காரியத்தில் துல்லியத்தை கொண்டுவரும். மேலும், மற்றவர்களிடம் காரியங்களை பகிர்ந்தளிப்பதில் நான் சிறப்பாக செயல்பட இது உதவி செய்யும்.