05.12.24

இன்றைய சிந்தனைக்கு......

பகுத்தறிதல்: 

வாழ்க்கை நாடகத்தை பாராட்டுவது என்பதென்றால், தொடர்ந்து சந்தோஷமாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அனைத்தும் சுமூகமாக செல்லவேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் நாம் ஒவ்வொரு நாளையும் தொடங்குகிறோம். உண்மையில், எதுவும் தவறாக செல்வதை நாம் விரும்பவில்லை. மேற்கொண்டு, அவ்வாறு நடக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள் என்னும் புயலினால் நாம் தாக்கப்படுகின்றோம். இப்படிபட்ட எண்ணங்கள், நாளின் பிற்பகுதியை, நாம் சந்தோஷமாக கழிப்பதிலிருந்து நிறுத்திவிடகூடும்.

செயல்முறை:

வாழ்க்கை நாடகம் மிகவும் அழகானது என்பதை நான் புரிந்துக்கொள்வது அவசியம். ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது, மேலும், விசேஷமான ஒன்றை அது வழங்கவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தனித்துவமானது என்பதை நான் பாராட்ட கற்றுக்கொண்டவுடன், என் வழியில் வரும் எதையும் என்னால் இரசிக்க முடிகின்றது.