06.01.25

இன்றைய சிந்தனைக்கு......

விடுபட்டு இருப்பவரே மகிழ்ச்சியானவர் ஆவார்.

கணிப்பு: நம்முடைய வாழக்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும்போது நம்முடைய பற்று மற்றும் எதிர்பார்ப்புகளால் நாம் மிரண்டு விடுகின்றோம். இதன் காரணமாக, உண்மையில் அந்த சூழ்நிலையால் ஏற்படும் துன்பத்தை விட அதிகமான துன்பத்தை அனுபவம் செய்கின்றோம். நமது துயரத்திற்கு காரணம் அந்த சூழ்நிலை அல்ல ஆனால் நமது சொந்த எண்ணங்கள் தான் என்ற புரிதல் நம்மிடம் இல்லை.

தீர்வு: அந்த சூழ்நிலையில் வேறு ஒருவர் இருக்கும்போது நாம் எவ்வாறு அதை விடுப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றோமோ அவ்வாறு நம்மை நாம் பார்க்க வேண்டும். இவ்விதத்தில் சூழ்நிலைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதற்கும் அது நமக்கு எதைப் பற்றிக் வைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறியும்போதும், நாம் துயரத்தை அனுபவம் செய்யமாட்டோம். ஆனால் நம்மால் அனைத்து சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது.