06.05.25

இன்றைய சிந்தனைக்கு

புரிந்துகொள்வது 

புரிந்துகொள்வது என்றால் கற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்கு பிடிக்காத/தேவையற்ற ஒன்றை யாராவது கூறும்போது, நாம் பொதுவாக அவர்களிடமே குற்றம் காண்கின்றோம். இதற்கு சூழ்நிலையின் உண்மையான தன்மையை புரிந்துகொள்ளாததே காரணம் ஆகும்.

செயல்முறை:

ஒரு  காரணத்திற்காக மற்றவர்கள் என்னுடைய வாழ்க்கையில் தோன்றி உள்ளார்கள் என்பதை நான் புரிந்துகொள்வது அவசியம். மேலும் அவர்களிடம் என்னுடைய தொடர்பின் மூலமாக நடக்கின்ற அனைத்திலிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடியும். இந்த உண்மையை அறிந்துகொள்ளும்போது, நான் மற்றவர்களை குறைகூறுவதிலிருந்து விடுபடுவாதோடுஇது என்னை சுயவளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்கிறது.