06.07.24

இன்றைய சிந்தனைக்கு

கவனமாக கேட்பது

கவனமாக கேட்பது என்றால் ஒற்றுமையான உறவுமுறைகளை உருவாக்குவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் நேரம் கொடுத்து மற்றவர்கள் கூறுவதை கேட்டு புரிந்துகொள்வது, அவர்களிடம் சிறப்பாக தொடர்பு கொள்ள நமக்கு உதவி புரிகிறது. நாம் அவர்களுடைய வெளித்தோற்றத்தை பார்த்து அக்கறை கொள்ளாமல், அவர்களிடம் உள்ள உள்ளார்ந்த விஷயங்களில் அக்கறை கொள்வது அவசியம். இது மற்றவர்களுடைய தேவைகளை அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்வதோடு, அவர்கள் வளரக்கூடிய சூழலை வழங்குகின்றது.

செயல்முறை:

நான் மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்க தயாராகும்போது, என்னால் ஒற்றுமையான உறவுமுறைகளை உருவாக்கமுடிகிறது. அவர்கள் என்னைப்போல் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்க மாட்டேன், ஆனால் நாம் அனைவரும் ஏதோ சிறப்பான ஒன்றை வழங்கும் தனித்துவமான நபர்கள் என்பதை புரிந்துகொண்டு, அவர்கள் அவர்களாகவே இருப்பதற்கான மரியாதை என்னிடம் இருக்கிறது. அவர்களை அறிந்துகொண்டு வித்தியாசங்களை கொண்டாடுவதால், என்னுடைய அனைத்து உறவுமுறைகளும் பலம்வாய்ந்ததாக வளர்கின்றது.