06.08.24

இன்றைய சிந்தனைக்கு

அகத்தாய்வு

சூழ்நிலை கடினமானதா என்பது ஒருவருடைய சொந்த மனநிலையை பொருத்து உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலையை நாம் அனுபவம் செய்யும்போது, பெரும்பாலும்நாம் அதனால் மூழ்கடிக்கப் படுகின்றோம். நாம் அதில் சிக்கியுள்ளதால், எதைப்பற்றியும் சிந்திக்க இயலவில்லை. இவ்வாறு நடக்கும்போது, சிறு பிரச்சனை கூட பெரிய தடையாக மாறி, வெற்றிபெறுவது மேலும் கடினமாக ஆகின்றது.

செயல்முறை:

எந்த ஒரு பிரச்சனையின் அளவும் என்னுடைய மனதின் நிலையை பொருத்து உள்ளது. நடைமுறையில், பிரச்சனையானது எவ்வளவு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருப்பது விஷயமில்லை. நான் எவ்வாறு அதை எதிர்கொள்கின்றேன் என்பதுதான் முக்கியம். என்னுடைய மனம் அமைதியாக, சமநிலையில் இருக்கும்போது, என்னுடைய தன்னம்பிக்கை வளர்கிறது. என்னால் பிரச்சனையை வெற்றிகொள்ள முடியும் என நான் நம்பும்போது, நான் அவ்வாறு செய்வேன்.