06.10.24
இன்றைய சிந்தனைக்கு
நேர்மை
நேர்மையாக இருப்பது என்பது முன்னேற்றத்தை அனுபவம் செய்வதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நேர்மை என்பது பொய் அல்லது தவறானவற்றிலிருந்து விடுபட்டிருப்பது என நாம் பொதுவாக புரிந்துகொள்கின்றோம். ஆனால் நாம் இவ்விதத்தில் நேர்மையாக இருக்க முயற்சி செய்யும் போதிலும், நாம் சந்திக்கும் சூழ்நிலைகளால், இது அனைத்து நேரங்களிலும் சாத்தியமானதாக இல்லை.
செயல்முறை:
உண்மையான நேர்மை என்பது பொய் சொல்வதிலிருந்து விடுபட்டிருப்பதை விட, அதிகம் என்னுடைய உள்ளார்ந்த தன்மையோடு தொடர்புடையதாகும். நான் நேர்மையாக இருக்கும்போது ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் என்ன செய்ய வேண்டும் என்று நான் பார்கின்றேன். நான் செய்த தவற்றை ஒருபொழுதும் மீண்டும் செய்யாத அளவிற்கு, என்னால் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடிகின்றது.