06.10.25
இன்றைய சிந்தனைக்கு......
ஒவ்வொரு நாளும் தன்னலமற்ற ஒன்றைச் செய்வது மகிழ்ச்சியை உறுதி செய்வதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு தன்னலமற்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, அங்கு நிபந்தனையின்றி மகிழ்ச்சியைக் கொடுக்கும் திறன் இருக்கிறது. எந்த உறவுமுறையாக இருந்தாலும் அல்லது மற்றவரின் ஆளுமை எப்படிபட்டதாக இருந்தாலும், இதைச் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவரால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவின் ஆதாரமாக இருக்க முடிகிறது.
அனுபவம்:
நான் தரக்கூடிய சிறந்த பரிசு, மகிழ்ச்சியைக் கொடுப்பதும், துக்கத்தை முடிப்பதும் ஆகும். இதைப் பற்றி நான் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, எந்தவொரு வெகுமதிக்காகவும் அல்ல, ஆனால் தன்னலமற்று இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்னும்போது, அந்த செயலின் பலனை என்னால் கண்டுபிடித்து அனுபவம் செய்ய முடிகிறது. நான் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டுள்ளேன், மேலும் இந்த செயலை என்னால் ரசிக்க முடிகிறது.