07.06.24

இன்றைய சிந்தனைக்கு

இனிமை:

இனிமை என்ற அமிர்தம் மகிழ்ச்சியை பரவச் செய்து, சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு பெரிய காரியத்தை செய்து முடிக்கவேண்டி இருக்கும் போது - மிகவும் நெருக்கடியான சமயத்தில் - நாம் காரிய நோக்கத்தோடு இருப்பதற்கு முனைகின்றோம். நம்முடைய கவனமானது நம் கையில் இருக்கும் காரியத்தின் மேல் இருக்கின்றதே அன்றி, நம்முடன் பணியாற்றக்கூடிய உறவுமுறைகளுக்கு நாம் கவனம் கொடுப்பதில்லை. இது நம்முடைய வேலையின் செயல்திறனை அதிகரிக்க விடாமல் தடுகின்றது.

செயல்முறை:

நான் என்னுடைய வேலையை செய்து முடிப்பதோடு என்னுடைய உறவுமுறைகளை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். என்னுடைய சொந்த தனிப்பண்புகளை கண்டறிந்து, அதை நான் மற்றவர்களோடு பணியாற்றும்போதும் பார்க்கும்போது பகிர்ந்துக்கொள்வது, இனிமையை பரவச் செய்கிறது. இந்த உள்ளார்ந்த இனிமையானது, நேர்மறையான அதிர்வுகளை பரப்புவதோடு, மகிழ்ச்சியான உற்பத்தி திறன் கொண்ட சூழலை உருவாக்குகிறது. இது அனைவரையும் மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது.