07.07.24

இன்றைய சிந்தனைக்கு

சமநிலை :

உண்மையான வெற்றியாளராக இருப்பதென்றால், என்னுடைய ஆசைகளையும் எனக்கு ஏற்ற சிறப்பானவற்றையும் சமநிலைப்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், வெற்றியாளராக இருப்பது சிரமமாக இருப்பதற்கான காரணம் நம்முடைய ஆசைக்கும் தேவைக்கும் உள்ள பொருத்தமின்மை. ஏதோ ஒரு நிலையில், நமக்கு சிறந்ததை நாம் தெரிந்து வைத்திருந்தாலும், நம்மால் ஞானத்தை செயல்களாக மற்ற முடியவில்லை.

செயல்முறை:

எனக்கு ஏற்ற சிறப்பானவற்றை வளர்த்துக்கொள்ள நான் விழிப்புணர்வுடன் முயற்சி செய்வது அவசியம். மேலும் அதை நான் ஆசைபடுவதோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். எனக்கு தேவையானவை என்னுடைய ஆசைகளோடு பொருந்தும்போது, நான் சுலபமாக முன்னோக்கி செல்வதையும் வெற்றிபெருவதையும் நான் காண்பேன்.