07.08.24
இன்றைய சிந்தனைக்கு
சந்தோஷம்
சூழ்நிலைகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது சந்தோஷத்தை கொண்டுவருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, நாம் சலிப்படைவதோடு மகிழ்ச்சியற்றவர் ஆகின்றோம். நாம் தொடர்ந்து ஒரே மாதிரியாக சிந்தித்து செயல்பட்டால், நாம் தேய்ந்த பாதையில் சிக்கிக்கொண்டவர் ஆகின்றோம். நம்மால் புதுமையான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்பங்களினால் உற்சாகம் அடைபவராக ஆக இயலாது. இது, நம்முடைய ஆக்கபூர்வமான சக்தியை இழக்கச் செய்வதோடு, உயிரற்ற மற்றும் உற்சாகமற்ற நிலைக்கு நம்மை இட்டு செல்கிறது.
செயல்முறை:
வாழ்க்கை சூழ்நிலைகளை நான் புதுமையான முறையில் அணுக முயற்சிக்கும்போது நான் சந்தோஷத்தை காண்கின்றேன். என்னுடைய மனதின் ஆற்றலும் சக்தியும் ஆக்கபூர்வமான வழியில் செலுத்தப்படுகின்றது. அதன்பின், நான் மனநிறைவையும், திருப்தியையும் உணர்கிறேன். வாழ்க்கை தானாகவே மிக அழகானதாக ஆகின்றது.