08.07.24

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை:

எண்ணங்களில் கவனம் வைப்பது, அதனுடைய சக்தியை அதிகரிக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு நாம் அதிகமான நேர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பது அவசியம். ஆனால் பெரும்பாலும், இதை நம்மால் நடைமுறை படுத்த முடியவில்லை. நேரம் கடந்து செல்ல செல்ல, ஒரு எண்ணம், அதன் முக்கியத்துவத்தை இழப்பதோடு, நாம் எதிர்மறையானவற்றில் சிக்கிக்கொள்வதை நம்மால் காண முடிகிறது.

செயல்முறை:

என்னுடைய வீணான, எதிர்மறை எண்ணங்கள் மற்றும் என்னுடைய சக்திவாய்ந்த, நேர்மறையான எண்ணங்களை பற்றி அட்டவணையில் குறித்து வைத்திருப்பது அவசியம். எதிர்மறையான எண்ணங்களினால் நான் எவ்வளவு நேரத்தை வீணாக்கினேன் என்பதை நான் உணர்ந்தால் மட்டுமே என்னால் மாற முடியும். நேர்மறை எண்ணங்களின் எண்ணிக்கையை நான் அதிகரிக்கும்போது, என்னுடைய உள்ளார்ந்த சக்தியை நான் அதிகரிக்கின்றேன்.