08.10.24
இன்றைய சிந்தனைக்கு
சுயகட்டுப்பாடு
எஜமானாக இருப்பதென்றால் என்னிடம் இருக்கும் சக்திகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
வெவ்வேறான சூழ்நிலைகளில் நமக்கு உதவிசெய்து கொள்ள நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறுபட்ட சக்திகள் உள்ளன. ஆனால் நாம் எப்பொழுதும் சரியான நேரத்தில் சரியான சக்தியை பயன்படுத்த முடியாது இருக்கின்றோம். நம்முள் சக்தி இருப்பினும், நமக்கு தேவையானபோது அவற்றை நாம் பயன்படுத்த முடியவில்லை.
செயல்முறை:
என்னுடைய உள்ளார்ந்த அனைத்து சக்திகள் மீதும் ஆதிக்கம் செலுத்த நான் பயிற்சி செய்வது அவசியமாகும். எந்த அளவிற்கு நான் அதிகமாக பயிற்சி செய்கிறேனோ, அந்த அளவிற்கு அதிகமாக என்னுடைய சக்திகள், எனக்கு தேவையான வழிகளில் வேலை செய்வதை காண்கின்றேன். நான் முழுமையான சுய-கட்டுப்பாட்டுடன் இருக்கும்போது வெற்றியை உறுதிபடுத்துவதற்கு என்னால் சரியான சக்தியை சரியான நேரத்தில் பயன்படுத்த முடிகின்றது.