08.10.25
இன்றைய சிந்தனைக்கு......
செய்யும் செயல் எங்கு வழிநடத்தி செல்லும் என்பதன் தெளிவான குறிக்கோளைக் கொண்டிருப்பது அனைத்திலும் வெற்றி பெறுவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
அனேகமான நேரங்களில் ஒருவர் ஒர் சூழ்நிலையைப் பார்த்தவுடனேயே செயல்படுகிறார். ஆனால் வெற்றிகரமாக இருப்பவர் சூழ்நிலையை ஆராய்ந்து, அவர் செய்யும் செயலின் முடிவை யூகித்து, இறுதி முடிவை மனதில் வைத்து செயல்படுகிறார். உண்மையில் அந்த செயலைச் செய்வதற்கு முன் செயல்களின் விளைவுகளை அறிந்து கொள்வதால், சவால்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் அவரால் தொடர்ந்து முயற்சி செய்ய முடிகிறது. எனவே அவர் தொடர்ந்து தனது பணியை சிறப்பாகச் செய்கின்றார்.
அனுபவம்:
நான் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பும் எனக்கு சிந்திக்க நேரம் கொடுக்கின்றேன், எனது சிந்தனையில் தெளிவாக இருக்க வாய்ப்பைப் பெற முடிகிறது. நான் எடுக்க விரும்பும் செயலின் விளைவுகள் என் மனதில் தெளிவாக உள்ளன, எனவே, சூழ்நிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது. எனவே, நான் எளிதான மற்றும் உறுதியான வெற்றியைப் பெறுகின்றேன்.