08.11.25
இன்றைய சிந்தனைக்கு
உண்மை:
உண்மையுள்ள ஒருவரை அனைவரும் நேசிப்பதோடு அவர் மீது நம்பிக்கையும் வைக்கின்றார்கள்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் உண்மையாக இருக்கும்போது நம்முடைய செயல்களும் வார்த்தைகளும் சமமாக இருக்கின்றன. நாம் கூறுவதையே செய்கின்றோம், செய்வதையே பேசுகின்றோம். இதன் காரணமாக நாம், அனைவரிடமிருந்து மதிப்பையும் அன்பையும் பெறுகின்றோம்.
செயல்முறை:
என்னால் நிறைவேற்ற முடியாத காரியம் ஒன்றை, இன்று, நான் செய்வேன் என்று நான் நம்ப வேண்டும். எனக்குள் உண்மை சக்தி இருக்கின்றது என்றும், அது என்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களை சமமாக ஆக்கும், என்பதை எனக்கு நானே நினைவுபடுத்திக்கொள்வது அவசியமாகும்.