09.06.24

இன்றைய சிந்தனைக்கு

ஸ்திரத்தன்மை:

சிரமங்களும் பின்னடைவுகளும் தனக்குள் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை வெளிக்கொண்டு வருகின்றன.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது, நமக்கு தேவையான வளங்கள் பற்றாக்குறையாக உள்ளது எனவோ அல்லது அவற்றை  நம்மால் சிறப்பான முறையில் பயன்படுத்த முடியவில்லை எனவோ நாம் சிந்திக்கலாம். இதனால் நாம் அதிகமான எதிர்மறையானவற்றை அனுபவம் செய்வதோடு, நம்மால் உண்மையாக முன்னேறிச் செல்லவும் இயலவில்லை.

செயல்முறை:

நான் மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் ஸ்திரமாக இருக்கும் கலையில் கைதேர்ந்தவர் ஆகும்போது, எனக்குள்  மறைந்திருக்கும் பொக்கிஷங்களை எவ்வாறு பயன்படுத்துவது என கற்றுக்கொள்கின்றேன். என்னுடைய மனம், மேற்கொண்டு  எதிர்மறையான எண்ணங்களால் குழம்பவில்லை. மேலும் ஒவ்வொரு சூழ்நிலை வரும்போதும், சுலபமாக எதிர்கொண்டு அவற்றிலிருந்து கற்றுக்கொள்கின்றேன்.