09.07.24

இன்றைய சிந்தனைக்கு

அகத்தாய்வு:

சுயத்தில் கவனம் செலுத்துபவரே, தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்வார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு சூழ்நிலையை சந்திக்கும்போது, மற்றவர்களையும், அவர்களுடைய தவறுகளையும் பற்றி, சிந்திப்பதும் பேசுவதும் சுலபம். நம்மைப் பற்றி சிந்திப்பதற்கோ அல்லது நாம் செய்யும் தவறுகளை புரிந்துகொள்வதற்கோ, நமக்கு நேரம் இருப்பதில்லை. அதனால், நம் தொடர்ந்து அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்கின்றோம்.

செயல்முறை:

நான் எந்தவித சூழ்நிலையை சந்தித்தாலும், என்னிடம் நான் மாற்றத்தை கொண்டுவந்தால், நான் நன்மை அடைவேன் என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். இப்படி சிந்திப்பதன் மூலம், என்னால் என்னுடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனத்தை செலுத்தி, நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடியும்.