10.01.25
இன்றைய சிந்தனைக்கு......
தூய உணர்வுகள் மற்றவர்களை சென்றடைந்து நன்மை கொண்டு வருகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவர் எதிர்மறையானவராக இருந்தால், அந்த நேரத்தில் நாம் எதிர்மறையாக சிந்தித்கின்றோம் அல்லது பேசுகின்றோம். எதிர்மறையைப் பற்றி சிந்திப்பது என்றால் நமது மனதிலும் அந்த எதிர்மறையை உட்கிரகிப்பது என்பதாகும். அதன்பின் நம் மனம் தூய்மையானதல்ல, எனவே அந்த நபருக்காக நாம் கொண்டிருக்கும் எவ்வகையான எண்ணங்களும் நேர்மறை தாக்கத்தை கொண்டிருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு அதில் எவ்வித ஆதாயமும் இல்லை.
தீர்வு: நாம் சிலர் பலவீனத்தை பயன்படுத்துவதை பார்த்தால், அதைப் பற்றி சிந்திக்கவோ அல்லது பேசவோ கூடாது. அதற்கு பதிலாக நாம் மற்றவர்களிடம் இருக்கும் சில சிறப்பு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களுக்கு அவற்றை பயன்படுத்த ஊக்கமளிக்கிறது. நாம் மென்மேலும் எதிர்மறையைப் பார்க்கும்போது, அவர்களும் மேலும் நம்மிடம் எதிர்மறையாக இருக்கிறார்கள். நாம் ஆக்கபூர்வமானவற்றை பார்க்கும்போது அவர்களும் நம்மிடம் அவ்விதமாகவே நடந்துகொள்கிறார்கள்.