10.06.24

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைத்தன்மை:

தன்னை தான் மாற்றிக் கொள்பவர்கள் சொக்கத் தங்கம் ஆவார்கள்.

சிந்தக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும் இந்த உலகில் உள்ள எதிர்மறையானவற்றால் நாம் சுலபமாக பாதிக்கப்படுகின்றோம். ஒவ்வொரு சம்பவமும் பரிமாற்றமும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நாம் வெளியிலிருந்து பெருமளவு தூய்மையற்றத்தன்மையை உள்வாங்குகின்றோம். இது தங்கத்துடன் உலோகத்தை கலப்பது போலாகும். நமக்குள் இருக்கும் எதிர்மறையானவற்றின் பாதிப்பில் நாம் இருப்பதனால், நம்மால் சுலபமாக நம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை. நம்மை மாற்றிக் கொள்ள முடியாதபோது, நம்மால் வளர முடியவில்லை.

செயல்முறை:

வெளிப்புற சூழ்நிலைகளிலும் மனிதர்களிடமும் இருக்கும் எதிர்மறைதன்மையிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொள்வது அவசியம். இப்படி செய்வதற்கு உகந்த வழி, எனக்குள் உள்ளார்ந்த நேர்மறைத்தன்மையை வளர்த்துக் கொள்வதாகும். இது எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக, பாதுகாப்பு அமைப்பை கட்டுவது போலாகும். என்னால் உள்ளார்ந்த தூய்மை மற்றும் நேர்மறைத்தன்மையை பேணிக்காக்க முடியும் போது, என்னை நானே மாற்றிக்கொள்ள முடிவதை பார்க்க முடிகின்றது.