10.07.24

இன்றைய சிந்தனைக்கு

சுதந்திரம்:

எதிர்மறையானவற்றிலிருந்து விடுபட்டு இருப்பது என்பது உண்மையான சுதந்திரமாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் அனைவரும் சுதந்திரத்தை விரும்புகின்றோம். நாம் விரும்பியவாறு நம்மை வெளிப்படுத்திக்கொள்ள மற்றவர்கள் நமக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் சில நேரங்களில், இந்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் நாம் சரியானவற்றை செய்ய இயலாமல் இருக்கின்றோம். தவறான சுதந்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும் இப்படிப்பட்ட செயல்கள் நம் அனைவருக்கும் கெடுதல் விளைவிக்கிறது.

செயல்முறை:

உண்மையான சுதந்திரம் என்பது முழுமையாக எதிர்மறைகளிலிருந்து விடுபட்டு இருப்பதாகும். எதிர்மறையான பாதிப்புகளிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ளும்போது, என்னுடைய செயல்களுக்கு என்னால் பொறுப்பேற்க முடியும். அதன்பிறகு, நான் செய்ய வேண்டியதை செய்ய, எனக்கு தன்னிச்சையாகவே சுதந்திரம் இருக்கிறது. ஏனென்றால் அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் மட்டுமே என்னுடைய சுதந்திரத்தை நான் பயன்படுத்துவேன்.