11.01.25

இன்றைய சிந்தனைக்கு......

சேவை:

உண்மையான சேவை என்பது அனைவரை சுற்றியும் சந்தோஷத்தின் ஒளியை பரப்புவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எவ்வித எதிர்மறையான சூழ்நிலையிலும், விரக்தியாகவும் சந்தோஷமற்று உணர்வதும் பொதுவான விளைவாகும். சூழ்நிலைக்கு இவ்விதத்தில் எதிர்த்து செயல்படும்போது, சந்தோஷமின்மை சுற்றி பரவுவதால் சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வழியில் பிரச்சனையில் கவனம் செலுத்துவது ஒருவரையும் தீர்வுக்காக பணியாற்றுவதற்கு ஊக்கமளிக்காத அளவிற்கு எதிர்மறையானவற்றை உருவாக்குகிறது.

அனுபவம்:

கடினமான சூழ்நிலையின்போது எதிர்மறைதன்மையை பார்ப்பதன் மூலம் சந்தோஷமின்மையை பரப்புவதற்கு பதிலாக, எவ்வாறு தீர்வு காண்பது என சிந்திப்பது அவசியமாகும். நம்மால் முடியாதபோதிலும், நம்முடைய சொந்த நேர்மறைதன்மையை பேணுவதற்கு உதவும் சில நேர்மறையான அம்சத்தை பார்ப்பது அவசியமாகும். இவ்விதத்தில் நம்மை நாம் சந்தோஷமாக வைத்துக்கொள்ளும்போது, நம்மால் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை பரப்ப முடியும்.