11.02.25
இன்றைய சிந்தனைக்கு
அன்பு:
ஒரு காரியத்தை அன்போடு செய்வது என்றால் தொடர்ந்து வெற்றி பெறுவது என்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் புதிதாக எதாவது ஒன்றை செய்ய ஆரம்பிக்கும்போது, பொதுவாக, ஆரம்பத்தில் சிறப்பாக செய்கின்றோம். ஆனால் வெற்றி நிலைப்பதில்லை. ஒரு காரியத்தை செய்தாக வேண்டும், என்று செய்வதனால் தான் இவ்வாறு மீண்டும் மீண்டும் நடக்கிறது. இவ்வாறு வெளிப்புற அழுத்தத்தினால் நாம் தூண்டப்படும்போது, அந்த காரியத்தில் தொடர்ந்து செயலாற்றுவது சாத்தியமில்லாமல் போகின்றது.
செயல்முறை:
அன்பு, தொடர்ந்து வெற்றியைக் கொண்டு வருகிறது. ஒருமுறை, காரியத்திலிருக்கும் சந்தோஷத்தை அனுபவம் செய்துவிட்டால், அதன் பிறகு நான் அதை கைவிட மாட்டேன். நான் விரும்பியவற்றை செய்யும்போது, அந்த காரியம் வெற்றி பெறுவதற்காக என்னுடைய அனைத்து ஆற்றலையும் அதில் பயன்படுத்துவேன். மேலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும்.