11.07.24

இன்றைய சிந்தனைக்கு

மற்றவர்களுடன் தொடர்புகொள்வது:

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் கலையை தெரிந்தவர்களே வெற்றியாளர்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக நம்மிடம் நல்லவர்களாக இருப்பவர்களிடம் நாம் இரக்கம் மிக்கவர்களாக இருக்கின்றோம். ஆனால் யாராவது நன்றாக நடந்து கொள்ளாதபோது, நாம் அவரிடம் நம்முடைய மனோபாவம், பதிலளிக்கும் தன்மை மற்றும் நடத்தையை மாற்றும் மனப்போக்கை  கொண்டுள்ளோம். நம்மை மாற்றிக்கொள்வதற்கு முன் நாம் மற்றவர் மாற வேண்டும் என காத்திருக்கின்றோம். அதனால், நம்மிடமோ அல்லது மற்றவர்களிடமோ நம்மால் மாற்றத்தை காண முடியவில்லை.

செயல்முறை:

நான் மற்றவர்களுடைய உள்ளார்ந்த குணங்களை பார்க்கும்போது, அவர்களோடு மிகவும் சுலபமாக தொடர்பு கொள்கின்றேன். இன்று என்னுடைய சொந்த வளர்ச்சிக்காக மற்றவருடைய நடத்தையை நான் சார்ந்து இருக்க மாட்டேன். அதற்கு பதிலாக, ஒவ்வொருவருடைய நேர்மறையான அம்சங்களையும் பார்த்து அவற்றை எனக்குள் கிரகித்துக் கொள்வேன். இவ்வாறு, ஒவ்வொரு தொடர்பிலும் நான் அனுபவசாலி ஆகுவேன்.