11.10.22
இன்றைய சிந்தனைக்கு
நேர்மறைதன்மை
எண்ணங்கள் என்னும் பொக்கிஷத்தை புரிந்துகொள்வது அவற்றை சக்திவாய்ந்ததாக ஆக்குகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய செயல்கள் நம்முடைய சிறப்பான நடத்தையை பிரதிபலிப்பதை உறுதிபடுத்துவதற்கு நாம் விசேஷமான கவனம் செலுத்துகின்றோம். நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை பற்றியும் நாம் சிந்திக்கின்றோம். ஆனால் நம்முடைய எண்ணங்களில் நாம் அரிதாகவே கவனம் செலுத்துகின்றோம். சில எண்ணங்கள் மீண்டும் மீண்டும் தோன்றும்போது, அவை நம்மை கட்டுப்படுத்துகின்றன.
செயல்முறை:
நான் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பது முக்கியமானதாகும். என்னுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும்போது; அவற்றிலிருந்து நான் சக்தியை எடுத்துக் கொள்ள கூடிய பொக்கிஷமாக அவை திகழ்கின்றன. என்னுடைய வார்த்தைகளும் செயல்களும் கூட இயற்கையாகவே சக்திமிக்கதாகின்றன.