11.12.24
இன்றைய சிந்தனைக்கு......
திருப்தி:
திருப்தியுடன் இருக்கும் ஒருவர், தானும் பாதிக்கப்படுவதில்லை, மற்றவர்களையும் பாதிப்படையச் செய்வதில்லை.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நான் மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது என்று சிந்தித்தாலும், அநேகமான முறை, நான் பேசும் வார்த்தைகள், செயல்கள் அல்லது நடத்தையானது மற்றவர்களை பாதிப்படையச் செய்கிறது. சூழ்நிலையைப் பற்றி நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன், ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இல்லை. இப்படிப்பட்ட நேரங்களில், என்னால் காரணத்தை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. மேலும், மற்றவைகள் நியாயமாக இல்லை என்று கருதுகின்றேன்.
செயல்முறை:
மற்றவர்கள் என்னிடம் திருப்தியற்று இருக்கும்போது, என்னை நான் சோதிப்பது அவசியம். தொடர்ந்து என்னை நான் சோதித்து, மாற்றிக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம், காலத்திற்கு ஏற்ப, நான் முன்னோக்கிச் செல்ல முடியும். இது உண்மையான, திருப்தியைக் கொண்டுவரும் – இந்தவிதமான திருப்தியினால், நானும் பாதிப்படைவதில்லை மற்றவர்களும் பாதிக்கப்படுவதில்லை.