12.04.25
இன்றைய சிந்தனைக்கு
இனிமை
மனப்பூர்வமாக பேசுவதென்றால், இனிமையை பரவச் செய்வதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
மற்றவர்களுடன் பேசும்போது, பெரும்பாலும், நாம் காரணகாரியத்தோடு பேசுகின்றோம். இவ்வாறு பேசப்படும் வார்த்தைகள், மற்றவர்களின் மனதை அரிதாகவே தொடுகின்றது. அதாவது, அவை எந்த தாக்கத்தையும் உருவாக்காததால், அவை விரைவில் மறக்கப்படுகின்றன.
செயல்முறை:
நான் பேசும்போது, மற்றவர்களின் மனதை தொடுவதில், இதற்கான தீர்வு அமைந்துள்ளது. அதை செய்வதற்கு, நான் மனப்பூர்வமாகவும், புத்தியை கொண்டு காரண காரியத்தின் அடிப்படையிலும், அன்பு நிறைந்ததாக என்னுடைய வார்த்தைகள் இருப்பது அவசியம். இந்த முறையில் மற்றவர்களுடன் நான் தொடர்பு கொள்ளும்போது, என்னுடைய வார்த்தைகள் இனிமையை பரவச் செய்கிறது.