12.07.24

இன்றைய சிந்தனைக்கு

சமநிலை

சமநிலையில் இருப்பதே உறவுமுறைகளில் வெற்றியுடன் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சமநிலையில் இருப்பது என்பது சரியான நேரத்தில் சரியானவற்றை செய்வதாகும். அதாவது புத்தியால் புரிந்துகொண்டதை மனப்பூர்வமாக ஒரே சமயத்தில் செயல்படுத்தும் ஆற்றலாகும். அன்பு மற்றும் ஒழுக்கத்தை சந்தோஷத்துடன் சமமாக அனுபவம் செய்யும் ஆற்றலாகும்.

செயல்முறை:

இன்று நான் ஒவ்வொரு செயலையும் சமநிலைபடுத்த முயற்சிப்பேன். இது எவ்வாறு என்னுடைய உறவுகளை சுமூகமாக்கி மற்றவர்களுடைய ஆசிர்வாதங்களை எனக்கு பெற்றுக் கொடுக்கிறது என்பதை கவனிப்பேன். அதன்பிறகு நான் செய்யும் அனைத்திலும் வெற்றியை அனுபவம் செய்து, ஆனந்தமான வாழ்வை வாழ்வேன்.