12.10.24
இன்றைய சிந்தனைக்கு
ஒத்துழைப்பு
நல்லாசிகள் ஒத்துழைப்பை வெல்கின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
காரியம் செய்து முடிக்கப்படுவதற்கு கோபத்தை அல்லது வேகத்தை பயன்படுத்துவது பொதுவான ஒன்றாகும். ஆனால் அது மற்றவர்களில் நல்ல உணர்வுகளை தூண்டுவதில்லை. காரியம் செய்துமுடிக்கப்பட்ட போதிலும், அது அவ்வளவு சிறப்பாக செய்து முடிக்கப்படாமலோ அல்லது அதிலிருந்து உண்மையான திருப்தியையோ நாம் பெற முடியாமல் இருக்கின்றோம்.
செயல்முறை:
காரியம் செய்து முடிக்கப்படுவதை விட என்னைச் சுற்றி உள்ளவர்களுக்காக நான் நேர்மறையான உணர்வுகளையும் நல்லாசிகளையும் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை நான் பார்க்கும்போது, என்னால் அவர்களை நேசிப்பதை தவிர்க்கமுடியாது. அந்த அன்பை நான் வெளிப்படுத்தும்போது, ஒருங்கிணைந்த லட்சியத்தை நோக்கி அனைவரும் செய்யலாற்ற நேர்மறையான சூழலை என்னால் உருவாக்க முடிகின்றது. மற்றவர்கள் என்னோடு ஒத்துழைப்பது பற்றி நான் இனி நான் கவலைப்பட தேவையில்லை. மாறாக அது இயற்கையாக நடக்கின்றது.