12.12.24

இன்றைய சிந்தனைக்கு......

சந்தோஷம்:

சந்தோஷமாக இருக்கும் ஒருவரால், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய பெரும்பான்மையான நேரம், மற்றவர்களை திருப்திப்படுத்துவதிலும் அவர்களை சந்தோஷப்படுத்துவதிலும் சென்றுவிடுகிறது. அநேகமான முறை, நம்முடைய சிறந்த முயற்சி இருந்தும்கூட, நாம் செய்ததை மனிதர்கள் பெரிதாக பாராட்டுவதில்லை. யாரையாவது நாம் மிகவும் சிரமபட்டு திருப்திப்படுத்த முயற்சி செய்யும்போது, நாம் மனச்சோர்வடைந்து பாதிக்கப்பட்டிருப்பதை உணர்கின்றோம்.

செயல்முறை:

நான் திருப்தியாக இருப்பதற்கு நான் செய்யும் அனைத்தையும் பற்றி நான் அறிந்திருக்கும்போது, மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக நான் எதையும் செய்வதில்லை. நான் செய்யும் முயற்சியை பற்றி நான் திருப்தியாக இருக்கும்போது, மற்றவர்களின் அங்கிகாரத்தை நான் சார்ந்து இல்லை.  நான் செய்யும் அனைத்தையும் நான் இரசிக்கும்போது, நான் உண்மையில் சந்தோஷமாக இருக்கின்றேன். நான் அதிகமாக திருப்தியாக இருக்கும்போது, மற்றவர்கள் என்னுடைய முயற்சியை அதிகமாக பாராட்ட ஆரம்பிப்பார்கள்.