13.01.25
இன்றைய சிந்தனைக்கு......
வலிமை:
வலிமையாக இருப்பதென்பது வாழ்க்கையில் நேர்மறைதன்மையை உறுதி செய்வதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நான் பலவீனமாக இருக்கும் போது, நான் உண்மையில் என் வாழ்கையில் தவறான மற்றும் பலவீனமான விஷயங்களை வரவேற்பதற்கு அனுமதிக்கின்றேன். நான் வலிமையாக இருந்தால், நான் சுய மரியாதை மற்றும் பெருமிதத்துடனும் செல்வதற்கு எனக்கு தெரியும். பலவீனம் கூட என் வழியில் வரத் தயங்கும். அனைத்து சூழ்நிலையிலும் என்னால் என்னுடைய பலத்தை பயன்படுத்த முடியும்.
அனுபவம்:
இன்று நான் என்னுடைய சொந்த விசேஷதன்மைகளை ஒரு பட்டியலிட்டு நாள் முழுவதும் என் விழிப்புணர்வில் வைத்திருப்பேன். நான் அந்நாளின் போது குறைந்தது 10 முறை எனக்குள் நினைவு செய்து கொள்வேன். எனவே, இன்று நான் என் வலிமையை விழிப்புணர்வில் வைத்து முன்னோக்கி செல்வேன்.