13.07.24
இன்றைய சிந்தனைக்கு
நம்பிக்கை
நம்பிக்கை ஒத்துழைப்பை பெற்றுத் தருகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
மற்றவர்களுடைய உதவியின்றி நம்மால் காரியங்களை செய்யமுடியும் என்று நாம் சிந்திக்கும்போது, நாம் கர்வமுடையவராக இருக்கின்றோம் அல்லது நம்மால் மற்றவர்களை நம்ப முடியவில்லை என்றும் பொருள்கொள்ளாலாம். இந்த நம்பிக்கையின்மையினால் நாம் நம் கையிலிருக்கும் காரிய அனுகூலத்திற்காக மற்றவர்களுடைய திறமையை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை இழக்கின்றோம். ஒருவரின் பயனுள்ள திறமையை நாம் இழப்பதோடு, அவரோடு சேர்ந்து பணியாற்றி கிடைக்கும் வெற்றியையும் அது குறைத்துவிடுகிறது.
செயல்முறை:
ஒத்துழைப்பு மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் புரிந்துகொள்வது அவசியம். நான் என்னுடைய நேரத்தையும் வளங்களையும் மற்றவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் பயிற்சி அளிப்பதிலும் முதலீடு செய்யும்போது, அது அவர்களிடமிருக்கும் சிறப்புத்தன்மைகளை வெளிக்கொண்டுவரும். அவர்கள் அதிகமாக பங்காற்றும்போது அல்லது அவர்களுடைய திறமைகளை சிறப்பான முறையில் பயன்படுத்தும்போது, நாம் அனைவரும் சிறப்பான பலனை அடைய முடியும்.