14.04.25

இன்றைய சிந்தனைக்கு

சந்தோஷம்

சந்தோஷமாக இருப்பதற்கான காரணங்களை கண்டுபிடிப்பதென்றால் சந்தோஷத்தை அதிகரிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில நேரங்களில், நாம் எதிர்மறையான உணர்வுகளில் சிக்கிக்கொண்டிருப்பதையும், அதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியாதிருப்பதையும் காண்கின்றோம். அந்நேரத்தில், மனமானது கவலை மற்றும் துக்கமாக இருப்பதற்கான காரணங்களை தேடுவதால்பெரும் முக்கியத்துவமற்ற சூழ்நிலைகள் கூட, எதிர்மறையான கண்ணோட்டத்தில், பார்க்கப்படுகின்றன.  நாம் நன்றாக உணர முயற்சிப்பதற்கு, நாம் அனுதாபத்திற்காகவும் மன நிம்மதிக்காகவும் மற்றவர்களை நாடுகின்றோம். ஆனால் இது, சிறிது காலத்திற்கு மட்டுமே வேலைசெய்யும்.

செயல்முறை:

நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நான் அனைத்தையும் நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிக்கின்றேன். அதாவது, நான் கலர் கண்ணாடியை அணிவது போன்றாகும்: முழு உலகமும் பிரகாசமான தோற்றத்தை பெறுகிறது. என்னை சுற்றி உள்ள எதிலுமே நான் எதிர்மறையை பார்க்கவில்லை. நான் பார்த்து அனுபவம் செய்யும் அனைத்தும் என்னுடைய சந்தோஷத்தை அதிகரிக்க மட்டுமே செய்கின்றன.