14.07.24

இன்றைய சிந்தனைக்கு

விவேகம்

விவேகத்துடன் இருப்பவரே மனதை போஷாக்குடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தினந்தோறும், நாம் உணவளித்து உடலை பேணுவதற்கு நேரம் கொடுக்கின்றோம். நாம் போதுமான அளவு உணவு கொடுக்காதபோது – அதாவது நமக்கு பசிக்கிறது என்பதை நாம் உணர்கின்றோம். ஆனால் நமக்கு தேவையான ஆன்மீக உணவைப்பற்றி நாம் அவ்வளவாக அறியவில்லை. நம்முடைய ஆன்மீக போஷாக்கில் குறைபாடு ஏற்பட்டால், நம்முடைய மனம், வெளியே இருந்து வரக்கூடிய தாக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் பலவீனமாக இருக்கும்.

செயல்முறை:

தினந்தோறும் ஏதேனும் நல்ல கருத்துக்களை படிப்பது அல்லது கேட்பது என்னுடைய மனதை மகிழ்ச்சியாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவும். நல்ல எண்ணங்களை மீண்டும் மீண்டும் சிந்திப்பது, நான் கேட்டதை நினைவு படுத்திக்கொள்ள எனக்கு உதவி செய்கிறது. அதன்பிறகு, நான் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதால், மேற்கொண்டு என்னுடைய வழியில் கடினமான சூழ்நிலைகள் வரும்போதும், அவற்றை சந்திக்க என்னிடம் உள்ளார்ந்த ஆற்றல் இருக்கிறது.