14.12.24
இன்றைய சிந்தனைக்கு......
சுய – கட்டுப்பாடு:
சுய - கட்டுப்பாடு என்பது, அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
காரியங்கள் தவறாகும்போது, பெரும்பாலும், நம்முடைய முதல் எண்ணமானது, சூழ்நிலையையோ அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்களையோ கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. ஆனால், இவ்விரண்டும் நம் கையில் இல்லாததால், இவ்விதத்தில் சிந்திப்பதில் வெற்றி நிச்சயமில்லை. இது எதிர்மறையை மட்டுமே அதிகரிக்கும்.
செயல்முறை:
என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை, கட்டுப்படுத்த நான் முயற்சி செய்வதைக் காட்டிலும், என்னை நான் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியம். எந்த அளவிற்கு அதிகமாக, தொடர்ச்சியான கவனத்தினாலும், சோதிப்பது மற்றும் மாற்றிக்கொள்வதன் மூலம் என்னை நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேனோ, அந்த அளவிற்கு அதிகமாக, அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும்.