15.01.25

இன்றைய சிந்தனைக்கு......

அன்பு:

மற்றவர்களின் துயரத்தை அகற்றும் ஒருவன் அனைவராலும் நேசிக்கிபடுகின்றான்.

சிந்திக்க வேண்டிய கருத்து:  மற்றவர்களின் துயரத்தை அகற்ற உதவுவதற்கான ஒரு நோக்கம் இருக்கும்போது, மற்றவர்களை கையாளும் போது எதிர்மறையான எதுவும் இருப்பதில்லை. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளும் இல்லை. இயல்பான ஆற்றலுடன் அநேகமானோருக்கு நன்மை கொண்டுவருவது எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு ஒருவரை முடிந்தவரை தொடர்ந்து பங்களிக்கவும் செயல்படுத்துகிறது.

செயல்முறை:

மற்றவர்கள் மேலும் சந்தோஷமாக இருப்பதற்கு உதவி செய்வதற்கு ஒரு விருப்பத்தை நான் கொண்டிருக்கும்போது, மற்றவர்களின் சந்தோஷத்திற்கும் முன்னேற்றத்திற்கும் என்னால் பங்களிப்பு செய்ய முடிகின்றது. அதன் பிறகு மற்றவர்கள் இயல்பாகவே என் தன்னலமற்ற பங்களிப்பை பாராட்டுவதோடு அவர்களின் நல்லாசிகள் நான் லேசாக உணர்வதற்கு உதவுவதோடு முன்னேற்றத்தை அனுபவம் செய்யவும் உதவுகிறது.