15.06.24

இன்றைய சிந்தனைக்கு

திறந்தமனப்பன்மை:

கற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பது முன்னேற்றத்தை கொண்டு வருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

யாராவது  நம்மை திருத்தும்போதும் அல்லது அறிவுரை வழங்கும்போதும், பெரும்பாலும் அவர்களை  நாம் எதிர்கின்றோம். மேற்கொண்டு கேட்பதற்கு விருப்பமில்லாதவர் ஆகின்றோம். இவ்வளவு முயற்சியை நாம் மேற்கொள்ளும்போது, மற்றவர்களுடைய ஆலோசனைகளை நாம் கேட்க முடியாமல் போகலாம். இந்த மனோபாவம் நாம் கற்றுக்கொண்டு மேலும் முன்னேறிச் செல்ல நமக்கு உதவுவதில்லை.

செயல்முறை:

தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்வதற்கு, நான்  மனமுவந்து கற்றுக்கொள்ள திறந்த மனப்பான்மையுடன் இருப்பது அவசியம். இத்தகைய மனப்பான்மையை நான் கொண்டிருக்கும்போது, நடக்கும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்கின்றேன். அதன் பிறகு ஒவ்வொரு பணியையும் என்னால் மேம்படுத்திக் கொள்ளமுடியும்.