15.07.24

இன்றைய சிந்தனைக்கு

திடமான நோக்கம்

சத்தியத்தை திடமான நோக்கத்தோடு இணைப்பது, ஒருவரை அனைத்து பிரச்சனைகளையும் வெல்ல செய்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, நாம் ஒரு சத்தியத்தை செய்யும்போது, பெரும் உற்சாகத்தோடு அதை மேற்கொள்கின்றோம். நாம் செய்வோம் என்று கூறியவற்றை நிறைவேற்றுவதற்கு, நாம் கடமைபட்டிருப்பதை நாம் உணர்கின்றோம். ஆனால், நாம் சிறிதளவு எதிர்ப்பையோ அல்லது சிரமத்தையோ எதிர்நோக்கும்போது, நாம் நம்பிக்கை இழந்து, முற்றிலும் அந்த முயற்சியை கைவிட்டுவிடும் மனப்போக்கு உடையவர்களாக இருக்கின்றோம்.

செயல்முறை:

என்னிடம் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து, என்னுடைய சத்தியத்தை நிறைவேற்ற, திடமான நோக்கம் என்னும் நற்குணத்தை நான் பயன்படுத்தவேண்டும். நான் மேற்கொண்ட ஒன்றை செய்து முடிப்பதற்கு, என்னுடைய உற்சாகம் குறைவதை நான் உணரும்போது, எனக்கு நானே, நான் செய்த சத்தியத்தை நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். இது, என்னுடைய எண்ணங்கள் மற்றும் சொற்களை, செயல்களாக மாற்றுவதற்கு இருக்கும் தடைகளை வெல்ல எனக்கு உதவி செய்யும்.