15.12.24
இன்றைய சிந்தனைக்கு......
திடமான நோக்கம்:
திடமான நோக்கம் வெற்றியைக் கொண்டுவரும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
சிரமமான நேரங்களில், நம்முள் அதிகமான எதிர்மறைத்தன்மையை நாம் அனுபவம் செய்கிறோம். அந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையானது, மிகவும் பெரிதாக தெரிவதோடு, அது எப்போதும் தொடரப்போவதாக தென்படுகிறது.
செயல்முறை:
ஆரம்பத்தில் தெரியும் அளவிற்கு, சூழ்நிலையானது அவ்வளவு சிரமமானதாக இல்லை என்பதை நான் உணர்ந்துகொள்வது அவசியம். மேலும், நேரமானது நகராமல் இருப்பதுபோன்று தென்பட்டாலும், அது தொடர்ந்து நகர்கிறது – மேலும் ஒவ்வொரு புதிய நிமிடமும் மாற்றத்திற்காகவும் வெற்றிக்காகவும் புதுப்பிக்கப்பட்ட வாய்ப்பை கொண்டுவருகிறது. இந்த புரிந்துணர்வின் அடிப்படையில் என்னுடைய பணியை நான் திடமான நோக்கத்துடன் மேற்கொள்வது அவசியம். அதன் பிறகு எந்த சூழ்நிலையையும் என்னால் சுலபமாக சந்திக்க முடியும்.