16.01.25

இன்றைய சிந்தனைக்கு......

திருப்தி:

திருப்தி இருக்குமிடத்தில், சிக்கல்கள் முடிந்துவிடுகின்றன.

சிந்திக்க வேண்டிய கருத்து:

திருப்தி என்பது ஒருவரை வாழ்க்கையை பற்றி ஒரு நேர்மறையான பார்வையை கொண்டிருக்க செய்கிறது. எனவே, எப்போதும் திருப்தியாக இருக்கும் ஒருவர் தீர்வுகளை நோக்கி செயல்படுகின்றார். அவர்  ஒருபொழுதும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதில்லைஆனால் எப்போதும் ஓய்வுபெற்ற நிலையில் இருக்கின்றார். இது தனிச்சையாகவே மற்றவர்களுக்கு நன்மையளிக்கும் திறனைக் கொண்டுவருவதோடு அவர்களுக்குள் முன்னேற்றம் கொண்டுவரவும் அவர்களுக்கு ஆதரவைக் கொடுக்கிறது. அத்தகைய ஒரு நபர் தனது சொந்த முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றுகிறார்.

அனுபவம்:

நான் நடந்துகொண்டிருக்கும் அனைத்தை பற்றியும் திருப்தியாக இருக்கும்போது, அனைத்து சூழ்நிலைகளிலும் என்னால் லேசாக இருக்க முடிகின்றது. அதனால் மிகப்பெரிய சிரமத்திலிருந்தும், நான் பிரச்சனையுடன் பிடிபடவில்லை, ஆனால் எப்பொழுதும் தீர்வு பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். என் மனம் தீர்வு காண்பதில் மும்முரமாக இருக்கிறது, எனவே உள்முகமாக நான் சிக்கலில் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறேன்.