16.04.25
இன்றைய சிந்தனைக்கு
ஒத்துழைப்பு
ஒத்துழைப்பை பெறுவதற்கான உகந்த வழி ஒத்துழைப்பை வழங்குவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பெரும்பாலும், நமக்கு உதவி தேவைப்படும்போது, நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நாம் உதவியை எதிர்பார்க்கின்றோம். நமக்கு என்ன தேவைப்படுகிறது என்று அவர்கள் புரிந்துகொண்டு அதை நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். நாம் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் எதிர்பார்கின்றோம் – இது நம்மிடமுள்ள திறமைகள் முழுவதையும் அறிந்துகொண்டு அவற்றை அனைவருடைய நன்மைக்காகவும் பயன்படுத்த நம்மை அனுமதிப்பதில்லை.
செயல்முறை:
சிறந்த முறையில் ஒத்துழைப்பை கொடுப்பதற்கு மனதின் சக்தியின் மூலம் மற்றவர்களுக்காக நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் உருவாக்கவும், காரியத்தின் வெற்றிக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் மற்றவர்களுடன் நான் ஒத்துழைக்கும்போது, எனக்கு அவசியமாக தேவைப்படும்போது, அவர்களுடைய ஒத்துழைப்பை நான் பெறுவேன்.