16.07.24

இன்றைய சிந்தனைக்கு

புரிந்துணர்வு

உறவுமுறைகளை மேம்படுத்துவதில் நாம் அக்கறை கொள்வது, புரிந்துணர்வை கொண்டுவரும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒருவரை பற்றி நமக்கு பிடிக்காத விஷயம் ஒன்று இருக்குமானால், அதை பற்றி எதிர்மறையாக பேசுவது சுலபமாகும். பெரும்பாலும், சிந்திக்காமல் நாம் செயல்பட்டு, கோபப்படுகின்றோம். நம்முடைய வார்த்தைகளும் நடத்தையும் எதிர்மறையாகவும் அவமதிப்பதாகவும் இருக்கின்றன. இது மேற்கொண்டு இடைவெளியை பெரிதாக்கி, உறவுமுறையை சேதப்படுத்துகிறது.

செயல்முறை:

யாராவது விரும்பத்தகாத ஒன்றை செய்தால், நான் முதலில் முயற்சி செய்து, அந்த நடத்தையை புரிந்துக்கொள்வது அவசியம். ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் நடத்தைக்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்நேரத்தில் என்னால் அதை புரிந்துக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் அவ்வாறு நடந்துக்கொள்ள காரணம் என்ன, என்று நான் சிந்திப்பது அவசியம். எந்த அளவிற்கு நான் அந்த நபரிடமோ அல்லது கெட்ட நடத்தையையோ, எதிர்த்து செயல்படுகின்றேனோ, அந்த அளவிற்கு, இடைவெளி அதிகமாகும். உறவுமுறைகளை மேம்படுத்துவதற்கு, அடுத்தவரின் நற்குணங்களை, எனக்கு நானே நினைவூட்டிகொள்வது அவசியம்.